நித்தமும் கயல் - பாகம் 2
கயல் என்ற அந்தப் பெயரைக் கேட்ட உடனே தாத்தா (நித்தன்) பதட்டமாக நாற்காலியில் உட்கார்ந்தபடியே தன் கண்ணாடியை கழற்றி கீழே வைக்கிறார். அப்போது தாத்தாவை அவரின் பேரன் "ஏன் தாத்தா இவ்வளவு பதட்டமாக இருக்கீங்க?" என்று கேட்டான். தாத்தாவின் மகன் கிருஷ்ணன் "பின்ன நீ இப்படி காதல் கீதல் என வந்து நில்லு.. அவர் பதட்டம் அடையாம இருப்பாறு.." என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து, மணியின் தந்தைக்கு தான் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து தனது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனால் மணியின் தந்தையோ தனது போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். பிறகு, மணியோ தன் தாத்தா (நித்தன்) விடம் "தாத்தா, ஒழுங்கா சொல்லுங்க. நீங்க அந்த கயல் என்ற பெயரைக் கேட்ட உடனே இவ்வளவு பதட்டமா? நல்லாவே தெரியுது. ஒழுங்கா சொல்லுங்க, யாரு தாத்தா அது?" என்று கேட்டான். அதற்குத் தாத்தா " பெயரளவில் கூட அது வெறும் பெயர் என்று சொல்ல முடியாது. என் வாழ்வில் பெரும் அங்கத்தை வகித்த ஓர் அழகிய பெயர் தான் அது " என்று சொன்னார். இதனைக் கேட்ட பேரன் "ஓ, அழகிய பேரா?" என்று கேட்டான். ...